முன்னாள் ஜனாதிபதியும் எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷவின் மகன்களில் ஒருவரான, ஹம்பாந்தோட்ட மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, எதிர்வரும் 18ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கோட்டை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நிதிக்குற்ற புலனாய்வு பிரிவில் நேற்று காலை ஆஜராகி வாக்குமூலமளித்தார். அதனையடுத்து, கைதுசெய்யப்பட்டார்.
தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.