நாமலுக்கு பிணை

பங்கு கொள்வனவு மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உட்பட மூவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாமல் அவர்களை இன்று கொழும்பு  நீதவான் முன் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாமல் ராஜபக்ஷ மற்றும் ஏனைய இருவருக்கும் ரூபாய் 100 லட்சம் பெறுமதியான 4 சரீர பிணைகள் மற்றும் ரூபாய் 1 லட்சம் ரொக்கப்பிணையிலும் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Posts