நான் போலீசில் மாட்டிக்கிட்டேன், காப்பாத்துடா: பிரபாஸுக்கு போன் செய்த ராணா

போலீசில் சிக்கிவிட்டதாக ராணா தனது நண்பர் பிரபாஸுக்கு போன் செய்ய அவர் சொன்ன பதில் சூப்பர்.

பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்களில் பல்லாள தேவனாக நடித்துள்ளார் ராணா. படத்தில் தான் ராணாவுக்கு பிரபாஸை பிடிக்காது. ஆனால் நிஜத்தில் இருவரும் நல்ல நண்பர்கள்.

அந்த நட்பு பொது இடங்களில் அவர்கள் நடந்து கொள்ளும் விதத்தில் இருந்தே அனைவருக்கும் தெரியும்.

ராணா கொஞ்சம் குசும்புக்காரர். திடீர் என்று அவருக்கு ஒரு ஐடியா வர பிரபாஸை கொஞ்ச நேரம் முட்டாள் ஆக்கலாம் என நினைத்து அவருக்கு போன் செய்துள்ளார்.

பிரபாஸ் போனை எடுத்ததும், நான் போலீசில் மாட்டிக் கொண்டேன். எனக்கு உதவி செய்ய நேரில் வா பிரபாஸ் என்று ராணா பதட்டமாக தெரிவித்துள்ளார்.

ராணா என்ன தான் பதட்டத்துடன் பேசினாலும் பிரபாஸுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. ராணா நடிக்கிறார் என்பதை உணர்ந்த பிரபாஸ், பாகுபலி 2 படத்தில் என்னுடன் நடித்துள்ளதாக போலீசாரிடம் கூறு அவர்கள் விட்டுவிடுவார்கள் என கூறியுள்ளார்.

தனது கெரியர் உச்சத்தில் இருந்தும் பாகுபலி படத்திற்காக 5 ஆண்டுகளை அர்ப்பணித்த பிரபாஸ் இன்று இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டாராகியுள்ளார். அவருக்காக சந்தோஷமாக உள்ளது என்று ராணா சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

Related Posts