நான் சிகப்பு மனிதன் பாணியில் மீண்டும் கே.பாக்யராஜ்!

1985-ல் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் ரஜினி நாயகனாக நடித்த படம் நான் சிகப்பு மனிதன். அம்பிகா நாயகியாகவும், சத்யராஜ் வில்லனாகவும் நடித்த இந்த படத்தில் இயக்குனர் கே.பாக்யராஜ் ஒரு சிஐடி வேடத்தில் நடித்திருந்தார். ரஜினி படம் என்றாலும் பாக்யராஜின் கேரக்டரும் அப்படத்தில் திருப்புமுனை வேடமாக அமைந்தது. இப்போதுவரை பேசப்படும் கேரக்டராகவும் உள்ளது.

Vaaimai-Press-Meet-Stills-10

இந்தநிலையில், தற்போது செந்தில்குமார் இயக்கத்தில் சாந்தனு நடித்துள்ள வாய்மை படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கே.பாக்யராஜ்.

இதுபற்றி வாய்மை பட டைரக்டர் செந்தில்குமார் கூறுகையில்,

இந்த படத்தின் பிரஸ்மீட்டில் தான் நடித்திருப்பதாக மிகச்சிறிய வேடம் என்று பாக்யராஜ் சார் சொன்னார். ஆனால், அவர் நடித்திருப்பது மிக முக்கியமான வேடம். அதாவது நான் சிகப்பு மனிதன் படத்தில் அவர் நடித்த சிஐடி வேடத்தைப்போன்று இந்த படத்தில் இன்னொரு மாறுபட்ட வேடத்தில் நடித்திருக்கிறார்.

அவர் படத்தில் என்ட்ரியான பிறகு கதையோட்டம் விறுவிறுப்பாகி விடும். அவர் பிரபலமான இயக்குனர் என்பதால் கதையையும், காட்சியையும் உணர்ந்து மெருகேற்றி நடித்துள்ளார். அந்த வகையில், வாய்மை படமும் கே.பாக்யராஜ் நடித்ததில் முக்கியமான படமாக இருக்கும் என்கிறார்.

Related Posts