நான் கொலைகாரன், பிரபாகரன் மிஸ்டரா? – மகிந்தவின் ஆதங்கம்

பயங்கரவாதிகளிடம் இருந்து நாட்டை பாதுகாத்த என்னை கொலையாளி என்று சித்தரிக்க முயற்சிக்கின்றனர். ஆனால் பல உயிர்களை கொன்று குவித்த விடுதலைப் புலிகளின் தலைவரை மிஸ்டர் பிரபாகரன் என்கின்றனர் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

குருநாகல் பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டமொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டில் கடந்த காலத்தில் பயங்கரவாதம் காணப்பட்ட போது எனக்கு முன்னைய ஆட்சியில் இருந்த தலைவர்கள் சமாதானத்திற்காக பிரபாகரனிடம் சென்று பேச்சு நடத்தினர்.

ஆனால் அவர்களையெல்லாம் பிரபாகரன் அடித்து விரட்டினார். பிரபாகரனை எவ்வாறு வீழ்த்த வேண்டும் என்பதை நான் அறிந்து வைத்திருந்தேன். அதன் படி பிரபாகரனை வீழ்த்தினேன். ஆனால் தற்போது எனக்கு எதிராக பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு என்மீது சேறுபூச முயற்சி செய்கின்றனர். என அவர் மேலும் தெரிவித்தார்

Related Posts