நான் இந்த இடத்திற்கு வருவதற்கு அம்மாவின் அழுகை தான் காரணம் – சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் இன்று விஜய், அஜித்திற்கு அடுத்த இடத்திற்கு வந்து விட்டார். இவரின் வளர்ச்சி குறித்து நாங்கள் கூற தேவையில்லை, தமிழ் மக்கள் அனைவருக்கும் அறிவார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் வெளிவந்த இவரின் ரஜினிமுருகன் திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது, தற்போது தமிழகத்தில் முன்னணி வார இதழ் ஒன்றில் சிவகார்த்திகேயன் மனம் திறந்துள்ளார்.

இதில் இவர் கூறுகையில்

‘ஒவ்வொரு முறையும் சினிமாவிற்கு வருவதற்கு முன் அம்மா, போன் செய்து எந்த ஒரு போட்டியாக இருந்தாலும், தோற்றுவிடாதே என்று அழுகையுடன் கூறுவார், இந்த வார்த்தைகள் தான் என்னை இந்த இடத்திற்கு வர வைத்தது’ என நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

Related Posts