சமாதானத்துக்கான நொபெல் பரிசு வென்றவரான மியன்மாரின் எதிர்கட்சித் தலைவி ஆங் சான் சூகி, தான் நாட்டின் அதிபர் தேர்தலில் போட்டியிடத் தடையாக இருக்கின்ற அரசியல் சாசன விதி நியாயமற்றது என்றும் ஏற்க முடியாதது என்றும் தெரிவித்துள்ளார்.
மியன்மார் சென்றுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் செய்தியாளர் கூட்டம் ஒன்றை நடத்திய போது சூகி இதனைத் தெரிவித்தார்.
அந்த அரசியல் சாசன விதி அர்த்தமற்றது என்று ஒபாமாவும் விமர்சித்திருந்தார்.
சூகியின் பிள்ளைகள் பிரிட்டிஷ் பிரஜைகள் என்பதால் அவரால் அதிபராக முடியாது என்ற நிலை உள்ளது.
இந்த சர்ச்சைக்குரிய விதி அடுத்த ஆண்டு புதிய அதிபர் தேர்தல் நடத்தப்படுவதற்கு முன் அகற்றப்படப்போவதில்லை எனத் தெரிகிறது.
தேர்ந்தெடுக்கப்படும் புதிய நாடாளுமன்றமே மியன்மாரின் புதிய அதிபரைத் தெரிவுசெய்யும்.