இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்காரா, ரசிகர்களிடம் பல விடங்களை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.
இந்நிலையில் அவுஸ்திரேலிய ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு சங்கக்காரா வெளிப்படையாக பதிலளித்துள்ளார்.
அந்த ரசிகர்,”நீங்கள் பல டெஸ்ட் அணிகளுக்கு எதிராக சிறப்பாக விளையாடி வெற்றி தேடித் தந்துள்ளீர்கள், உலகக்கிண்ணம் வென்ற அணியிலும் இடம் பிடித்துள்ளீர்கள், உங்களது கிரிக்கெட் வாழ்க்கை சிறப்பாகவே இருந்தது.ஆனால் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக வெற்றி பெற்ற இலங்கை அணியில் இருந்ததே இல்லையே, ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த சங்கக்காரா, ஆமாம், அது ஏமாற்றம் அளிக்கும் விடயமாகவே இருந்தது. 2004ம் ஆண்டு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்த போது கூட ஷேன் வார்னே, ஸ்டூவர்ட் மெக்கில் அந்த வாய்ப்பை தட்டி பறிவிட்டார்கள் என்று தெரிவித்தார்.
மேலும், ஓய்வு பெற்றது குறித்து பேசிய சங்கக்காரா, எப்போதும் ரசிகர்கள் என்னிடம் ’ஏன் நீங்கள் ஒரு 2 ஆண்டு கூடுதலாக விளையாடவில்லை, 15,000 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி நகரவில்லை’ என்று பல கேள்விகளை கேட்பார்கள்.
ஆனால் நான் ஓய்வு பெற வேண்டும் என்று மட்டுமே முடிவெடுத்தேன். எனது முன்னால் இருக்கும் எந்தவொரு விடயத்தையும் நான் பார்க்கவில்லை.
நான் எனது தனிப்பட்ட சாதனைகளுக்காக விளையாடி இருந்ததால் அந்த கேள்விகளுக்கு எல்லாம் கண்டிப்பாக பதிலளிக்க முடியும். ஆனால் நான் அணியின் வெற்றிகளுக்காகவே விளையாடினேன் என்றார்.
மேலும், அவுஸ்திரேலியாவுக்கு எதிராக பெற முடியாத வெற்றிகளுக்காக கவலை தெரிவித்த சங்கக்காரா, அணிக்காக சிறப்பான பங்களிப்பு அளித்த பிறகு ஓய்வு பெற்றதில் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார்.