நான்காவது முறையாக சுசீந்திரனுடன் இணையும் இமான்

விஷாலை வைத்து ‘பாயும் புலி’ இயக்கிய சுசீந்திரன், அடுத்ததாக உதயநிதியை வைத்து படம் இயக்கவுள்ளார். இப்படத்திற்கு இமான் இசையமைக்கவுள்ளார். இதற்கு முன் சுசீந்திரன் இயக்கிய ‘பாண்டிய நாடு’, ‘ஜீவா’, ‘பாயும் புலி’ ஆகிய படங்களுக்கு இமான் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது.

இதை தொடர்ந்து நான்காவது முறையாக இப்படம் மூலம் சுசீந்திரனும் இமானும் இணைந்துள்ளனர். இவர்கள் கூட்டணியில் வெளிவந்த முந்தைய படங்களின் பாடல்கள் போல் இப்படத்திலும் பாடல்கள் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்க இருக்கிறது. இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை விரைவில் வெளியிட இருக்கின்றனர்.

உதயநிதி தற்போது இந்தியில் வெற்றி பெற்ற ஜாலி எல்.எல்.பி படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்து வருகிறார். அகமது இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்திற்குப் பிறகு சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

Related Posts