நான்காம் நாள் நிகழ்வு தமிழாராய்ச்சி மாநாடு படுகொலை நினைவுத்தூபியில்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் நான்காம் நாளான நேற்று (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணம் மாநகரில் அமைந்துள்ள தமிழர் ஆராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டோரின் நினைவுத்தூபியில் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்பட்டது.

வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நினைவேந்தலில் பலர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

1974ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக ஆராய்ச்சி மாநாட்டில் ஏற்பட்ட கலவரத்தில் ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

உலகலாவிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்தவிடாமல் அப்போதைய சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசு, அங்கு பொலிஸாரை அனுப்பி கலவரத்தை ஏற்படுத்தியது. இதன்போது ஒன்பது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

Related Posts