நானும் பின்னணி பாடகர்தான்!! சந்தோஷ் நாராயணனை அசரவைத்த விஜய்!

தனது இரண்டாவது படமான தேவா படத்திலேயே அய்யய்யோ அலமேலு ஆவின் பசும்பாலு என்ற பாடலை பாடியவர் விஜய்.

vijay-santhosh-narayanan

அதிலிருந்து தனது ஒவ்வொரு படங்களிலுமே பின்னணி பாடி வந்த அவர் ஒருகட்டத்தில் பாடுவதை நிறுத்தினார்.

பின்னர், தலைவா, துப்பாக்கி, ஜில்லா, கத்தி என தொடர்ந்து டூயட் பாடல்களாக பாடி வருகிறார். அப்படி விஜய் சமீபகாலமாக பாடிய எல்லா பாடல் களும் ஹிட்டாகி வருகின்றன.

அதனால் தற்போது அவர் நடித்துள்ள பைரவா படத்திலும் அவரை ஒரு டூயட் பாட வைத்துள்ளார் சந்தோஷ்நாராயணன்.

மேலும், வழக்கம்போல இந்த பாடலுக்குரிய டியூனை முன்பே கேட்டு வாங்கிய விஜய், சில நாட்கள் அதை உள்வாங்கியபடி ரெக்கார்டிங் தியேட்டருக்கு வந்தவர், பல்லவி, சரணம் என பிட் பிட்டாக சிங்கிள் டேக்கில் பாடிக்கொடுத்து விட்டாராம்.

அதைப்பார்த்து ஆச்சர்யமடைந்த சந்தோஷ் நாராயணன், எப்படி சார் பின்னணி பாடகர்கள் மாதிரி பாடிட்டீங்க? என்று கேட்டதற்கு, நானும் பின்னணி பாடகர்தான். இப்ப பாட ஆரம்பிக்கல, என்னோட இரண்டாவது படத்தில் இருந்தே பாடிக்கிட்டிருக்கேன் என்றாராம்.

Related Posts