“நானும் தமிழ் பொறுக்கிதான்” கமல்

‘நானும் தமிழ் பொறுக்கிதான் ஆனால் நான் டெல்லியில் பொறுக்கவில்லை’ என ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்த சுப்ரமணிய சாமியின் கருத்துக்கு நடிகர் கமல்ஹாசன் பதிலடி கொடுத்துள்ளார்.

நேற்று சென்னையில் ஒளிப்பதிவாளர் சங்கத்திற்கான இணையதள துவக்க விழா நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த விழாவில் பேசிய கமல்,”யாரோ ஒருவர் தமிழர்கள் எல்லாம் பொறுக்கிகள் என பேசியிருக்கிறார். ஆமாம்.நான் கண்டிப்பாக தமிழ் பொறுக்கிதான்.எங்கே சென்று பொறுக்க வேண்டும் என்பது எனக்கு தெரியும். ஆனால் கண்டிப்பாக டெல்லி சென்று பொறுக்க மாட்டேன்.என்னடா இவன் திடீரென அரசியல் பேசுகிறானே என்று நினைக்காதீர்கள். நான் பேசுவது அரசியல் அல்ல.தன்மானம்.

ஒரு வேளை நான் சினிமாவுக்கு வராமல்,கலெக்டராகவோ,இன்ஜினியராகவோ இருந்திருந்தால் அலங்காநல்லூர் கிராமத்தில் இந்நேரம் நின்றிருப்பேன்.”என தெரிவித்தார்.

ஏற்கனவே ஜல்லிக்கட்டு போராட்டங்களை தொடர்ந்து ஆதரித்து வரும் கமல்ஹாசன்,தமிழர்களை பொறுக்கிகள் என விமர்சித்த சுப்ரமணிய சாமிக்கு நல்ல பதிலடியை தந்திருக்கிறார் என அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Related Posts