நாட்டுக்கு தேவை மஹிந்த இல்லாத அரசாங்கமே – ஜனாதிபதி

மஹிந்த ராஜபக்‌ஷ இல்லாத அரசாங்கம் ஒன்றுதான் நாட்டிற்குத் தேவையாக உள்ளது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

maithripala-sirisena

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இணைந்த ஊடக நிறுவனங்களின் பிராணிகளுடனான சந்திப்பு ஒன்று நேற்று பிற்பகல் இடம்பெற்றது.

இதில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தினால் இலங்கை சம்பந்தமாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில் இதன்போது ஜனாதிபதி கருத்து தெரிவித்தார்.

ஜனவரி 8ம் திகதி நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் எமது வௌிநாட்டுக் கொள்கைகளில் பாரிய மாற்றம் ஏற்பட்டது. சர்வதேசத்திற்கு எமது நாடு தொடர்பில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்களுக்கு தேசிய பொறிமுறை ஒன்றினூடாக தீர்வு பெற்றுக் கொள்ளும் நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

ஒருவேளை நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படாமல், மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்திருந்தால், ஜெனிவா மனித உரிமைகள் ஆணையகத்தினால் இலங்கை தொடர்பில் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையானது பல மடங்கு கடினமானதாக இருந்திருக்கும்.

அது மிகவும் பயங்கரமானதாக இருந்திருக்கும். நாடு பல்வேறு விளைவுகளை சந்திக்க நேரிட்டிருக்கும்.

மஹிந்த ராஜபக்‌ஷவின் அரசாங்கம் தான் சர்வதேசத்திற்கு சென்று பொய் வாக்குறுதிகளை வழங்கியது. உள்ளக விசாரணை நடத்துவதாக கூறியது. இறுதியில் சர்வதேசத்தை பகைத்துக் கொண்டது.

தற்பொழுது நாடு ஆபத்தில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளது. ஜெனிவா மனித உரிமைகள் ஆணையகத்தினால் வௌியிடப்பட்ட அறிக்கை 1000 மடங்கு கடினத்தன்மை குறைக்கப்பட்டுள்ளது.

சர்வதேசம் தற்பொழுது இலங்கை தொடர்பில் தௌிவான நிலையில் உள்ளது.

எங்களுக்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. நாம் சிறந்த வௌிநாட்டுக கொள்கையை முன்னெடுத்து வருகின்றோம்.

ஆகவே இதே நிலமை தொடர வேண்டுமானால் நாட்டின் தற்போதைய தேவை மஹிந்த இல்லாத அரசாங்கமே என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

அத்துடன் சீபா உடன்படிக்கை தொடர்பில் கருத்து வௌியிட்ட ஜனாதிபதி, அவ்வாறான எந்தவொரு உடன்படிக்கைகளும் இந்தியாவுடன் ஒப்பந்தமாகவில்லை என்று தெரிவித்தார்.

ஜெனிவா அறிக்கை தொடர்பிலும் சரி சீபா உடக்படிக்கை பற்றியும் சரி செய்திகளை வௌியிடும் ஊடகங்கள் சரியான செய்திகளை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Related Posts