நாட்டுக்கு ஏற்படப் போகும் அழிவைத் தடுக்கவே சகல கட்சிகளும் இணைந்தன! மைத்திரி வெல்வது உறுதி!!

அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து பணியாற்றியமையால்தான் எமது நாடு சுனாமிப் பேரலை பாதிப்பில் இருந்து குறுகிய காலத்தில் மீண்டெழ முடிந்தது.

இதேபோன்று இப்போது நாட்டுக்கு ஏற்படப்போகும் பேரனர்த்தத்தைத் தடுக்க மீண்டும் அனைத்துக் கட்சிகளும் சேர்ந்துள்ளன.

எனவே அடுத்த மாதம் நடக்கும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன நிச்சயம் வெற்றி பெறுவார். – இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

chanthereccka-chan-

சுனாமிப் பேரலை அனர்த்தம் ஏற்பட்ட பத்தாவது ஆண்டு நினைவுதினம் இன்று கொழும்பு காக்கைதீவில் இடம்பெற்றது.

இதில் உரையாற்றிய சந்திரிகா தெரிவித்த விடயங்கள் வருமாறு:-

சுனாமிப் பேரலையின் தாக்கத்தினால் 2004 ஆம் ஆண்டு அனைத்துக் கட்சிகளும் பேதமின்றி இணைந்து செயலாற்றின.

இதனால் குறுகிய காலத்திலேயே நாட்டை மீளக் கட்டியெழுப்ப முடிந்தது. இதைப்போன்றே இப்போதும் அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்துள்ளன.

எனவே அடுத்த மாதம் ஜனவரி 8 ஆம் திகதி நடக்கும் தேர்தலில் வெற்றிபெறுவோம். ‘ஹெல்பிங் அம்பாந்தோட்டை’ நிதி முறைகேடு சம்பந்தமான வழக்கில் தீர்ப்பு வழங்கிய அப்போதைய பிரதம நீதியரசர் சரத் என் சில்வா பின்னர் தான் வழங்கிய தீர்ப்புத் தவறானது என்று கூறியிருந்தமையையும் நினைவுபடுத்தினார்.

அவர் மேலும் கூறுகையில் இப்போதிருக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கையால் நாடு பெரும் அழிவைச் சந்தித்தது. இதனால் நாட்டை மீளகட்டியெழுப்ப வேண்டும் என்றார்.

Related Posts