நாட்டில் மூன்றாவது கொரோனா அலை ஏற்படும் அபாயம் – மக்களுக்கு எச்சரிக்கை!

பொதுமக்களுக்கான சுகாதார வழிகாட்டுதல்கள் இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இந்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சிங்கள தொலைக்காட்சியொன்றில் நேற்று (புதன்கிழமை) இரவு இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதேநேரம், நாட்டில் மூன்றாவது கொரோனா அலை ஏற்பாடும் அபாயம் உள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

எனவே, புத்தாண்டு கொண்டாட்டங்களை சிறிய அளவில் முன்னெடுக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

Related Posts