நாட்டில் மிக வேகமாக பரவும் கொரோனா – மீண்டும் முடக்கப்படுகின்றது நாடு?

நாட்டை மீண்டும் முடக்குவதை நினைத்தும் பார்க்கமுடியாது என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாட்டை முடக்காமல் வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தவே முயற்சிப்பதாகவும், இதற்கு பொது மக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா சிகிச்சை நிலையங்களில் 6 ஆயிரத்து 25 கட்டில்கள் தற்போது பயன்படுத்தப்படுவதாகவும், எதிர்காலத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் அதனை சமாளிக்கக்கூடிய வளம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், வைத்தியசாலைகளில் போதுமானளவு ஒட்சிசன் உள்ளதாகவும், எனவே, வைத்தியசாலைகளில் இடப்பற்றாக்குறை மற்றும் ஒட்சிசன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என வெளியாகும் தகவல்கள போலியானவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டை மீண்டும் முடக்குவதை நினைத்தும் பார்க்கமுடியாது என தெரிவித்துள்ள அவர், அவ்வாறானதொரு நிலைமை ஏற்படாமல் இருக்க பொது மக்கள் சுகாதார நடைமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் எனவும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே நாடு முடக்கப்பட்டமையினால் ஏற்பட்ட பொருளாதாரத் தாக்கங்கள் இன்னும் எதிரொலித்துக்கொண்டுதான் இருக்கின்றன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts