தற்போது நிலவி வரும் இடைநிலை பருவப்பெயர்ச்சி காலநிலை காரணமாக மாலை நேரங்களில் நாட்டின் சில பிரதேசங்களில் ஆலங்கட்டி மழை விழக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரும் காலநிலை அவதானியுமான கே.ஆர்.அபேசிங்க தெரிவித்துள்ளார்.
மின்னல், மழை, டொனாடோவை ஏற்படுத்தும் மழை மேகங்களில் மேற்பரப்பில் சுமார் 8 கிலோ மீற்றர் வரை 95 வீதம் பனி படிந்திருப்பதாகவும் தற்போது பெய்து வரும் மழையுடன் அவை பனிக் கட்டிகளாக பூமியில் விழக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, 5 முதல் 10 நிமிட இடைவெளியில் பெய்யும் இடியுடன் கூடிய கனமழையில் பனிக்கட்டிகள் விழக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிற்பகல் 2 மணியின் பின்னர் இந்த நிலைமை ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் அபேசிங்க குறிப்பிட்டுள்ளார்.