நாட்டில் பல பகுதிகளில் சமையல் எரிவாயுவிற்கு தட்டுபாடு!

நாட்டின் பல பகுதிகளில் சமையல் எரிவாயுவிற்கான தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயுக்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களுக்கு 2.5kg, 12.5kg மற்றும் 12.5kg மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கிடைக்கப்பெறுவதாகவும் இதனாலேயே தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 15 ஆம் திகதி முதல் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

எனினும் சமையல் எரிவாயு விற்பனை செய்யும் நிறுவனங்கள் இதனை மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts