நாட்டில் தொழில் பற்றாக்குறை இல்லை; தகுதியானவர்கள் பற்றாக்குறை

நாட்டின் புதிய பரம்பரையை தொழில் மற்றும் தொழில்நுட்ப அறிவுடன் கூடிய மனித வளமாக கட்டியெழுப்பவதற்கு தேவையான வழிகாட்டல்கள் மற்றும் வளங்களை குறைவின்றி பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

தற்போது நாட்டில் ஏற்பட்டிருப்பது, தொழில் பற்றாக்குறை இல்லை என்றும் தொழில் துறைக்கு அவசியமான தகுதியுள்ளவர்களின் பற்றாக்குறையே என்றும் ஜனாதிபதி கூறினார்.

ஹிக்கடுவ, சீனிகம ஸ்ரீ ஜனரதன தொழில் மற்றும் தொழிற்கல்வி பயிற்சி நிலையத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றபோது, அங்கு கலந்துகொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

கொழும்பு, ஹுனுபிட்டி கங்காராம விகாரையின் விகாராதிபதி கலபொட ஞானீஸ்ஸர தேரரின் பிறந்த தினத்தை முன்னிட்டு இந்த பயிற்சி நிலையம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டதாக ஜனாதிபதி இங்கு கூறினார்.

இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அமைச்சர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

Related Posts