பேருவளையில் இன்று (30) சிறியளவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பதிவாகியுள்ளன.
இன்று வியாழக்கிழமை பிற்பகல் 1.02 மணியளவில் பேருவளை கடற்கரையிலிருந்து 37 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கடற்பகுதியில் 3.7 ரிச்டர் அளவில் சிறியளவான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
களுத்துறை, பேருவளை மற்றும் பாணந்துறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் நிலநடுக்கத்தை உணர்ந்ததாக சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.