நாட்டில் சிக்கன்குனியா பரவும் அபாயம் தீவிரம்!

நாட்டில் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு சிக்கன்குனியா நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதன்படி, அண்மையில் குழந்தைகளும் முதியவர்களும் சிக்கன்குனியா அறிகுறிகளுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, குழந்தைகள் நல மருத்துவர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

காய்ச்சல், மூட்டுவலி, உடல்வலி, உடலில் கருமைத் தன்மை ஏற்படுதல், குறிப்பாக மூக்கைச் சுற்றி நிறமாற்றம் போன்றவை இந்த வைரஸ் பாதிப்பின் முக்கிய அறிகுறிகள் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான அறிகுறிகள் தொடர்ந்து காணப்பட்டால், தாமதிக்காது அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு உடனே சென்று சிகிச்சைபெற வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, டெங்குவை பரப்பும் அதேவகை நுளம்புகள் சிக்கன்குனியாவையும் பரப்புவதால், நுளம்புகள் பெருகும் இடங்களை அழிப்பதன் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.

வீடுகளிலும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நீர் தேங்குவதை தடுத்தல், நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Posts