நாட்டில் கொரோனா தொற்றால் மேலும் 198 பேர் உயிரிழப்பு!!

நாட்டில் நேற்று (24.08.2021) கொரோனா தொற்றால் மேலும் 198 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில், 30 வயதுக்குட்பட்டவர்களில், ஆண் ஒருவரும், 30 தொடக்கம் 59 வயதுக்கிடைப்பட்டவர்களில் 37 ஆண்களும், 14 பெண்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 81 ஆண்களும். 65 பெண்களுமாக 198 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 7,948 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts