நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த ஒரு வார காலப்பகுதியில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கடந்த 7 நாட்களில் ஆயிரத்து 197 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 6 இலட்சத்து 68 ஆயிரத்து 141 ஆக அதிகரித்துள்ளதோடு கடந்த ஒரு வார காலப்பகுதியில் 36 கொரோனா மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, நாடளாவிய ரீதியில் 20 வயதுக்கு மேற்பட்டவர்களில் 8 மில்லியன் பேர் மாத்திரமே இதுவரை பூஸ்டர் தடுப்பூசியினை பெற்றுக்கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts