நாட்டில் ஏற்படப்போகும் வறட்சியிலிருந்து மக்களை எவ்வாறு காப்பதென மைத்திரி, ரணில் ஆலோசனை!

எதிர்வரும் மார்ச் மாதமளவில் இலங்கைக்கு ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படும் கடுமையான வறட்சியிலிருந்து மக்களை எவ்வாறு காப்பதென சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் ஆசோசனையில் ஈடுபட்டுள்ளதுடன், அதற்கென விசேட குழுவொன்றை நியமிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி மாத்தில் இருந்து ஏற்பட போகும் வறட்சி குறித்து நாட்டின் அனைத்து பிரதேசங்களுக்குமாக தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் முன்னெடுக்க இதன் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மின்தடை ஏற்படாதிருக்கவும், விவசாயிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவது மற்றும், குடிநீர் விநியோகம் தொடர்பாகவும் அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

Related Posts