கொரோனா தொற்று பரவல் நிலையைக் கருத்திற்கொண்டு நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் ஏப்ரல் 30 ஆம் திகதிவரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
ஏற்கனவே திருகோணமலை, அம்பாறை, கொழும்பு, மேல் மாகாணம், வடமேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.