நாட்டில் இன்று 4 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் மின்வெட்டு!

நாடளாவிய ரீதியில் இன்று (புதன்கிழமை) 4 மணித்தியாலங்கள் 40 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எரிபொருள் தட்டுப்பாட்டின் காரணமாகவே மின்வெட்டுக்கான கோரிக்கை விடுக்கப்பட்டதாக அந்த ஆணைக்குழு கூறியது.

அதன்படி, இன்றைய தினம் A,B மற்றும் C ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு 4 மணித்தியாலமும் 40 நிமிடமும் மின்துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளது.

ஏனைய வலயங்களுக்குள் உள்ளடங்கும் பகுதிகளுக்கு 4 மணித்தியாலமும் 30 நிமிடமும் மின்வெட்டு அமுலாக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேர அட்டவணை…

power cut table please click hear

Related Posts