நாட்டின் புதிய அரசாங்கம் குறித்து ஐ.நா செயலாளர் பாராட்டு!

இலங்கையின் பாராளுமன்ற தேர்தல் அமைதியான முறையில் இடம்பெற்றமைக்கு ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் வரவேற்பு தெரிவித்துள்ளார். அத்துடன் நாட்டில் இடம்பெற்றுள்ள புதிய மாற்றம் குறித்தும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றி குறித்தும் பான்கீமூன் பாராட்டுக்களையும் தமது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

தேர்தலை அமைதியான முறையில் நடத்த ஒத்துழைப்பு வழங்கிய பொது மக்கள், ஜனாதிபதி மற்றும் தேர்தல்கள் ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் தமது நன்றியினை அவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் பொது தேர்தல் குறித்து ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளரினால் வௌியிடப்பட்ட அறிக்கையொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளருக்கான ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டின் முன்னேற்றம், நல்லாட்சி, நல்லிணக்கம், இனங்களுக்கிடையிலான ஒற்றுமை ஆகிய செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்குமெனவும் அவர் நம்பிக்கை வௌியிட்டுள்ளார். நிலையான சமாதானத்தையும் சுபீட்ச்சத்தையும் இலங்கையில் ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி, பிரதமர், அரசாங்கம் மற்றும் இலங்கை மக்களுடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும் ஐ.நா செயலளார் நாயகத்தின் ஊடகப் பேச்சாளர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts