நாட்டின் பல பாகங்களுக்கும் இன்று (09) மழை எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலுள்ள பல பகுதிகளுக்கும் மழை எதிர்பார்ப்பதாகவும் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன், அடிக்கடி பலத்த காற்று வீசக்கூடும் எனவும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.