நாடு முழுவதும் வை-பை இணைப்பு அரசாங்கம் நடவடிக்கை!

நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் அதிகமான இடங்களில் இலவச ‘வை – பை’ (wi-fi)இணைப்புக்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாக வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் தொலைத்தொடர்பாடல் பிரதியமைச்சர் அஜித் பீ.பெரேரா தெரிவித்துள்ளார்.

wi-fi-logo

இதன் முதல் கட்டமாக எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னதாக கொழும்பு மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த 250 இடங்களில் இலவச வை பை (wi-fi)இணைப்புக்கள் வழங்கப்படுமெனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

இரண்டாம் கட்டமாக நாடு முழுவதும் உள்ளடக்கக் கூடிய வகையில் 750 இடங்களுக்கு இலவச வை-பை இணைப்புக்கள் வழங்கப்படவுள்ளன. இது எதிர்வரும் மூன்றுமாத காலத்திற்குள் பூர்த்தி செய்யப்படுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts