நேற்று நள்ளிரவு நாடுபூராகவும் மின்சாரம் தடைப்பட்டது. எதுஎவ்வாறு இருப்பினும் நிலைமை அதிகாலை 03.30 – 04.00 மணிவரையான காலப்பகுதிக்குள் முழுமையாக வழமைக்குத் திரும்பியுள்ளதாக, இலங்கை மின்சாரசபை பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
தொழிநுட்பக் கோளாறு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகின்றது. இது குறித்து விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, இனிமேல் இவ்வாறு நடக்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இதனால் மக்களுக்கு ஏற்பட்ட சிரமம் தொடர்பிலும் அவர் தனது கவலையை வௌியிட்டுள்ளார்.