நாடு திரும்பியுள்ள வாக்காளர்கள் அடையாள அட்டையுடன் கடவுச்சீட்டையும் சமர்ப்பிக்க வேண்டும்

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியுள்ள வாக்காளர்கள் தேசிய அடையாள அட்டைக்கு மேலதிகமாக செல்லுபடியாகும் கடவுச் சீட்டையும் எடுத்துவருவது கட்டாயம் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

mahintha-thesappireya

வெளிநாடு சென்றுள்ள வாக்காளர்களின் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளும் 2014 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் இடாப்பில் காணப்படும் அவர்களது வழமையான வதிவிட முகவரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு வெளிநாடுகளுக்கு சென்று இதுவரை நாடு திரும்பாத ஆட்களின் தகவ்களை அடிப்படையாக கொண்டு அவர்களின் வாக்குகளை அளிப்பதற்காக போலியான ஆடையாள அட்டைகள் தயாரிக்கப்படுவதாக தேர்தல்கள் செயலகத்திற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இத்தகைய ஆள்மாறாட்ட வாக்களிப்பை தடுப்பதற்காகவே தேசிய அடையாள அட்டையுடன், கடவுச் சீட்டையும் எடுத்துவருமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு கடவுச் சீட்டை சமர்ப்பிக்க முடியாத வாக்காளர்கள் வேறு செல்லுபடியான ஆள் அடையாள ஆவணமொன்றையும் அதற்கு மேலதிகமாக ஆள் அடையாளம் தொடர்பில் ஜனாதிபதி தேர்தல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை கட்டாயமாக சமர்பிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts