நாடுமுழுவதும் 400 இடங்களில் இருமடங்கு வேகத்தில் WiFi

நாடுமுழுவதும் எதிர்வரும் ஒக்ரோபர் மாதத்தில் 400 இடங்களுக்கு WiFi இணைய வசதியினை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்நடவடிக்கையை மேற்கொள்வதற்கு 5 நிறுவனங்களிடம் தகவல் பரிமாறப்பட்டுள்ளதாகவும், புதிய தொழிநுட்பத்தினூடாகப் பெற்றுக்கொடுக்கப்படும் WiFi வசதியானது இருமடங்கு வேகம் கொண்டதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறீகொத்தாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Related Posts