நாடுமுழுவதும் தீவிர சிகிச்சை பிரிவுகளின் திறனை அதிகரிக்க நடவடிக்கை!!

தற்போது நாடுமுழுவதும் பரவி வரும் கோவிட்- 19 நோய்த்தொற்றின் மூன்றாவது அலை காரணமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை அளிக்க தீவிர சிகிச்சை படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, கோவிட்-19 நோயாளிகளின் தீவிர சிகிச்சைக்காக ஜோன் கோத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனையில் மூன்று தீவிர சிகிச்சை பிரிவுகளை அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த விவகாரம் குறித்து விசாரிக்க சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி நேற்று இரவு (29) ஜோன் கோத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனைக்கு சிறப்பு பயணம் செய்தார்.

அடுத்தடுத்த சிறப்பு கலந்துரையாடலின் போது, ​​இந்த தீவிர சிகிச்சை பிரிவை பராமரிக்க தேவையான 30 சிறப்பு மருத்துவ வல்லார்க்கள், 80 மருத்துவர்கள், 80 தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் 25 சுகாதார ஊழியர்கள் ஆகியோரை விரைவாக அனுப்பவும் கோவிட்-19 சிகிச்சை சேவைகளை வலுப்படுத்த தேவையான மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட மருந்துகளை வழங்கவும் கோரப்பட்டது.

இந்த தீவிர சிகிச்சை பிரிவுகளில் பணிபுரியும் சுகாதாரப் பணியாளர்களுக்கு பாதுகாப்பான தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதிகளை வழங்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு அறிவுறுத்தப்பட்டது.

கோவிட்-19 சிகிச்சை சேவைகளை வலுப்படுத்தும் சிறப்பு திட்டத்தின் கீழ் தீவிர சிகிச்சை பிரிவை விரிவுபடுத்துவதற்கும், மருத்துவமனைகள் மற்றும் கோவிட்-19 சிகிச்சை மையங்களில் படுக்கைகளின் திறனை நாடுமுழுவதும் அதிகரிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

சுகாதார செயலாளர் நாயகம் மேஜர் ஜெனரல், மருத்துவ வல்லுநர் சஞ்சீவ முனசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசெல குணவர்தன, ஜோன் கோத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் மருத்துவர் ஜெயன் மெண்டிஸ், மருத்துவ சேவைகள் இயக்குநர் டாக்டர் பிரிகேடியர் சமன் திலக் மற்றும் பலர் பங்கேற்றிருந்தனர்.

Related Posts