நாடுமுழுவதும் சனி, ஞாயிறு முழுமையான ஊரடங்கு நடைமுறை!!

நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டம் இன்று ஏப்ரல் 24 வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் வரும் ஏப்ரல் 27 திங்கட்கிழமை காலை 5.00 மணி வரை நடைமுறையில் இருக்கும்.

அந்தவகையில் வார இறுதி நாள்களான 25 சனி மற்றும் 26 ஞாயிறு ஆகிய தினங்கள் நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டம் தொடர்ச்சியாக நடைமுறையில் இருக்கும்.

நாட்டில் 21 மாவட்டங்களில் கடந்த 20ஆம் திகதி தொடக்கம் அதிகாலை 5 மணி தொடக்கம் இரவு 8 மணிவரை ஊரடங்கு தளர்த்தப்பட்டு வந்தது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கு பிரவேசிப்பது மற்றும் அங்கிருந்து வெளியேறிச் செல்வது அனைவருக்கும் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.

Related Posts