நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் சில மணித்தியாலங்களுக்கு நாடுபூராகவும் மின்தடை ஏற்பட்டமைக்கு காரணம், வார இறுதியில் மின்சாரத்திற்கான கேள்வி குறைவடைந்தமையால், ஏற்பட்ட கொள்ளவு அதிகரிப்பே என தெரியவந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நிலவிய காலநிலை காரணமாக மின்சாரப் பாவனை குறைவடைந்திருந்ததாக, இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர், எம்.சீ.விக்ரமசேகர தெரிவித்துள்ளார்.
வார இறுதியில் இரவு 09.00 மணிக்குப் பின்னர் சாதாரணமாக 1900 மெகாவொட் மின்சாரம் பயன்படுத்தப்படும்.
எனினும் கடந்த ஞாயிற்றுக்கிழமை 950 மெகாவோட் மின்சாரமே பயன்படுத்தப்பட்டுள்ளதாக எம்.சீ.விக்ரமசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.