நாடாளுமன்ற வளாகத்தில் பதற்றம் – போராட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது!

நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 12 பேரை பொலிஸார் கைது செய்தனர்.

எதிர்ப்பாளர்கள் நாடாளுமன்ற நுழைவாயிலில் “நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிப்போம்…” என்ற பதாகைகளை ஏந்தியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதன்பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸ் அதிகாரிகள் குழு, போராட்டக்காரர்களை கைது செய்ய முற்பட்டபோது அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் இதுவரையில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts