வடமாகாணத்திலேயே கூடுதலான அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படு வருகின்றன என பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை தடுக்கும் வகையில் புலம்பெயர்ந்த தமிழர்கள் பிரசாரங்களை மேற்கொண்டால் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா? அரசியல் தீர்வு கிடைக்காது அதற்கு பதிலாக பிரிவினைவாதமே தலைத்தூக்கும்.
எனவே நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு செல்லுமாறு தமிழ் கட்சிகளுக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு செல்லுமாறு வலியுறுத்த வேண்டும் ஆனால் அதற்கு மாறாக இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தினால் தீர்வு கிடைக்காது எனபதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.