நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொடுப்பனவுகள் அதிகரிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்கான தனி அலுவலகங்களை அமைப்பதற்கான கொடுப்பனவு வழங்குவது தொடர்பான குறைநிரப்பு யோசனை நாடாளுமன்றில் நேற்று (புதன்கிழமை) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மேற்படி திட்டத்தின் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபாவினை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் 13 கோடியே 44 இலட்சம் ரூபாய்க்கான குறைநிரப்பு யோசனை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts