நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு பல்வேறு சிறப்புரிமைகள் வழங்கப்படுகிறது.
அவற்றில் சில…
- நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மாதச் சம்பளம் 54 ஆயிரத்து 525 ரூபாவாகும்.
- அமைச்சர் ஒருவரின் சம்பளம் 65 ஆயிரம் ரூபாவாகும்.
- நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கிடைக்கும் கொடுப்பனவுகள்.
- அடிப்படைச் சம்பளம் – 54,525
- போக்குவரத்து கொடுப்பனவு-10,000
- உபசரிப்பு கொடுப்பனவு -1,000
- செல்போன் கொடுப்பனவு – 2,000
- நாடாளுமன்றக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் கொடுப்பனவு(ஒரு கூட்டத்திற்கு)- 500
- அமைச்சர்களுக்கான கொடுப்பனவு மாதச் சம்பளம் 65,000
- பிரதியமைச்சரின் மாதச் சம்பளம்-63,500 அமைச்சர்கள்,
- பிரதியமைச்சர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவு மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுப்படும்.
- கொழும்பு மாவட்டத்திற்கு 18,845 ரூபா,
- களுத்துறை மாவட்டத்திற்கு 23,600 ரூபா,
- இரத்தினபுரி, காலி, கண்டி, குருணாகல் மாவட்டங்களுக்கு 28,300 ரூபா,
- மாத்தளை, புத்தளம், மாத்தறை, நுவரெலியா மாவட்டங்களுக்கு 32,990 ரூபா,
- பொலன்நறுவை, பதுளை, அம்பாந்தோட்டை, வவுனியா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, திருகோணமலை, அம்பாறை, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு 37,745 ரூபா என எரிபொருள் கொடுப்பனவு வழங்கப்படும்.
- இதனை தவிர நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு நிரந்திர தொலைபேசிகள் வழங்கப்படும். இதன் கட்டணங்களை நாடாளுமன்றமே செலுத்தும்.
- மாதிவல நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடியிருப்பில் வீடொன்றும் வழங்கப்படும். இதனை தவிர தொடர்ந்தும் 5 வருடங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தால், அவர்களுக்கு ஓய்வூதியமும் வழங்கப்படும்