நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கினால் ஜனவரி மாதம் தேர்தல் நடத்தப்படும்: தேர்தல் ஆணைக்குழு

எல்லை நிர்ணய அறிக்கைக்கு இம்மாதத்திற்குள் நாடாளுமன்ற ஒப்புதல் வழங்கப்படின், மாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறும் என, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

எல்லை நிர்ணய அறிக்கை எதிர்வரும் 24ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க அண்மையில் ஊடங்களுக்கு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இது தொடர்பாக நேற்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மாகாண சபைத் தேர்தலை புதிய தேர்தல் முறையின் கீழ் நடத்துவது என்ற அடிப்படையில் புதிய மாகாண சபை எல்லைகளை நிர்ணயிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உட்பட்டுள்ள நிலையில், எல்லை நிர்ணய அறிக்கைக்கு ஒப்புதல் வழங்குவதில் தொடரும் தாமதமே மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான பிரதான தடையாகக் காணப்படுகிறது என்றும் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

Related Posts