நாடாளுமன்றத் தேர்தலில் பொன்சேகா போட்டியிடுவார்!

எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடக்கும் நடாளுமன்றத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த மனவடுவ தெரிவித்தார்.

sarath_18

அமைந்த புதிய அரசாங்கத்தில் சரத் பொன்சேகா தேசியப் பட்டியல் மூலமாக நாடாளுமன்ற உறுப்பினராக வருவதற்கு உடன்பாடு ஏற்பட்டிருந்தது.

எனினும் அது தோல்வியில் முடிந்து விட்டது. ஆனாலும் இது குறித்து இப்போதும் பேசப்பட்டு வருகின்றது. ஆனால் வரும் ஏப்ரல் மாதம் நடக்கும் ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகா போட்டியிடுவார்.

இக்காலப்பகுதிக்குள் அவருக்கு இருக்கும் சட்டச்சிக்கல்கள் அனைத்தும் நீக்கப்பட்டு விடும் என்றார்.

Related Posts