நாடாளுமன்றத்தில் எம்.பிக்களுக்கு மசாஜ், பார்லர் வசதிகள்!

புதிய நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களுக்கு மசாஜ் சேவை சேவை வழங்கப்பட உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சேவைகளில் ஒன்றாக மசாஜ் பார்லர் சேவை உள்ளடக்கப்பட்டுள்ளது. இதில் ஆயுர்வேத முறையிலான மசாஜ் வழங்கப்பட உள்ளது. ஆயுர்வேத திணைக்களத்தினால் நிர்வாகம் செய்யப்படும் ஹெலவெத புனருத என்னும் நிறுவனம் இந்த சேவையை வழங்க உள்ளது.

தலை, கால் மற்றும் முழு உடலுக்குமான மசாஜ் சேவை வழங்கப்பட உள்ளது. அதிக உடல் எடையை குறைக்க சிகிச்சை மற்றும் அழகுக் கலை சேவை ஆகிய சேவைகளும் வழங்கப்பட உள்ளன. இந்த அனைத்து சேவைகளும் இலவசமாக மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட உள்ளது. அழகுக் கலை சேவை ஆகிய சேவைகளும் வழங்கப்பட உள்ளன.

அரசாங்க விடுமுறை தினம் தவிர்ந்த ஏனைய நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரையில் இந்த சேவை வழங்கப்பட உள்ளது. ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாடாளுமன்ற உணவகத்தில் மிகவும் தரமான உயரிய உணவு வகைகள் மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts