நாடளாவிய ரீதியில் முடக்கம் அமுல்படுத்தப்படாதென அரசாங்கம் அறிவித்துள்ளது.
நாட்டில் நிலவி வரும் கொவிட் -19 நிலைமை குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நடைபெற்ற முக்கியமான கலந்துரையாடலைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எனினும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.