நாடளாவிய ரீதியில் நாளை முதல் தனியார் பேருந்துகள் முற்றாக நிறுத்தப்படும்!!

போதியளவு டீசல் இல்லாத பட்சத்தில் நாளை (வியாழக்கிழமை) முதல் நாடளாவிய ரீதியில் தனியார் பேருந்துகள் முற்றாக நிறுத்தப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

டீசல் தட்டுப்பாடு காரணமாக மொத்த தனியார் பேருந்துகளில் 20 வீதமே இன்று சேவையில் ஈடுபடுவதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

தற்போதைய நிலைமை காரணமாக இலங்கை போக்குவரத்து சபை டிப்போவினால் தனியார் பேருந்துகளுக்கான டீசல் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, நிலவும் சூழ்நிலையை கருத்திற்கொண்டு இன்று முதல் பாடசாலை மாணவர்களுக்கான விசேட பேருந்து சேவையை ஆரம்பிக்க மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களை மாத்திரம் சாதாரண பேருந்து கட்டணத்தின் கீழ் ஏற்றிச் செல்வதற்காக தனியார் பேருந்துகளை பயன்படுத்தி இந்த விசேட பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Related Posts