நாடளாவிய ரீதியில் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் இன்று இடம்பெறும்.
டெங்கு ஒழிப்புக்கான வேலைத்திட்டத்திற்கு மக்கள் உயர்ந்தபட்ச ஒத்துழைப்பை வழங்கி வருகிறார்கள் என்று சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
டெங்கு நோய் தாக்கம் பற்றி மக்களுக்கு விளக்கம் அறிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். இலவச சுகாதார சேவையை மக்களுக்கு வழங்க அரசாங்கம் அர்ப்பணித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன இந்த விடயங்களை குறிப்pபட்டார்.
கடந்த மாதத்துடன் ஒப்பிடும்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும், டெங்கு நோயினால் ஏற்படும் மரணங்கள் குறைந்திருப்பதாக நிகழ்வில் கருத்து வெளியிட்டு தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் ஹஸித திசேரா தெரிவித்துள்ளார்.
இதுவரை 90 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர். 269 பேர் டெங்கு நோயினால் மரணம் அடைந்துள்ளார்கள் என்றும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் ஹஸித திசேரா மேலும் கூறினார்.