நாடளாவிய ரீதியில் இன்று ஏழரை மணித்தியால மின்வெட்டு!

நாடளாவிய ரீதியில் இன்றும்(வியாழக்கிழமை) ஏழரை மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதற்கமைய காலை 08 மணி தொடக்கம் மாலை 06 மணி வரையான காலப்பகுதியில் 05 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

மாலை 06 மணியிலிருந்து இரவு 11 மணி வரையான காலப்பகுதியில் இரண்டரை மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Related Posts