வடக்கு மாகாண சபை ஜனநாயக முறையில் செயற்படுகின்றது என்று கூறி முதலமைச்சர் பெருமிதமடைந்த நிகழ்வு ஒன்று நேற்று மாகாண சபை அமர்வில் நடைபெற்றது.
வடக்கு மாகாண சபையின் மாதாந்தக் கூட்டம் நேற்று கைதடியில் நடைபெற்றது. அதில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினருக்கு இடையில் விவாதத்தின் போது கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டது.
ஒருவரை ஒருவர் விஞ்சியவர்களாக காணப்பட்டனர். சபை மிகவும் பரபரப்பாகவும் சுவாரஷ்யமாகவும் இருந்தது. உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், அன்ரனி ஜெகநாதன் , அஸ்மின், ஆனோல்ட், லிங்கநாதன் , ஜெயதிலக , தர்மபால மற்றும் முதலமைச்சர், அவைத்தவைலர் ஆகியோருக்கு இடையில் பல விடயங்கள் தொடர்பில் கருத்து மோதல்கள் இடம்பெற்றன.
எதிர்க்கட்சி கேள்விகளைக் கேட்டு அரசாங்கத்திற்கு ஆதரவு தேடிக்கொண்டிருக்கும் போது பிழைகளை சுட்டிக்காட்டும் ஆளும் கட்சியினர் கொதித்தெழுந்து பதில்களை வழங்கினர்.
எனினும் இவர்கள் அனைவரும் தமிழில் உரையாடவில்லை. தங்களுக்கு வேண்டியவற்றை சிங்கள மொழியிலேயே பேசிக்கொண்டனர்.
அதன்போது எழுந்த முதலமைச்சர், வடக்கு மாகாண சபை ஜனநாயக முறையில் செயற்படுகின்றது என்பதற்கு இன்றைய சம்பவம் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
மொழிக்கு முக்கியம் கொடுத்து செயற்படும் ஒரு சபையாக வடக்கு மாகாண சபை இருக்கின்றது. பெரும்பான்மையினத்தை சேர்ந்த உறுப்பினர்கள் தங்களுடைய மொழியிலேயே பேசிக் கொள்ள எம்மில் பலருக்கு சிங்கள மொழி சரளமாக பேசமுடிகின்றது.
எனவே இதனை எண்ணி நாம் மிகவும் பெருமைப்படுகின்றேன். எங்கள் சபையைப் போல் எந்த மாகாண சபையும் இல்லை என்றும் அவர் மகிழ்வுடன் தெரிவித்தார்.