காங்கேசன்துறை-நாகப்பட்டினம் பயணிகள் கப்பல் மீண்டும் தாமதம்!

தமிழகத்தின் நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கு இயக்கப்படும் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் தாமதமடைந்துள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கப்பல் சேவையை இன்று முதல் மீண்டும் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும் கப்பல் சேவை மீண்டும் தாமதமடைவதாக குறித்த கப்பல் சேவை நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளதுடன் குறித்த கப்பல் சேவையை எதிர்வரும் 6ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts