நவ்ரு தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் உள்ளிட்ட அகதிகளை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச மருத்துவ தொண்டு நிறுவனமான MSF இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.
MSF தொண்டு நிறுவனம் கடந்த 11 மாதங்களாக அவுஸ்திரேலியாவிலுள்ள அகதிகள் முகாமில் பணிகளை மேற்கொண்டது.
எனினும், நவ்ரு அதிகாரிகளால் குறித்த தொண்டு நிறுவனம் வெளியேற்றப்பட்டது.
தாம் பணியாற்றிய இந்த காலப்பகுதிக்குள் மனநிலை பாதிக்கப்பட்ட அல்லது தற்கொலை செய்துக் கொள்ள முயன்ற 28 பேருக்கு மருத்துவ உதவிகளை வழங்கியுள்ளதாக MSF நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில் மனநிலை பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்த அகதிகள் முகாமை மூடி அங்குள்ளவர்களை வேறு இடங்களுக்கு மாற்றுமாறு MSF நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
எனினும் இந்த கோரிக்கைக்கு நவ்ரு அதிகாரிகளோ அல்லது அவுஸ்திரேலிய அதிகாரிகளோ இதுவரையில் எந்த வித பதில்களையும் வழங்கவில்லை.
நவ்ரு தீவில் 100 சிறுவர்கள் உள்ளிட்ட தொள்ளாயிரத்திற்கும் மேற்பட்ட அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.