அவுஸ்திரேலியாவில் புகழிடம் கோரிய நிலையில் பசிபிக் தீவான நவுறுவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் உள்ளிட்ட அகதிகள், அந்த சிறிய தீவில் சுதந்திரமாக உலாவ அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நவ்ரூ அரசாங்கம் நேற்று முன்தினம் குறித்த அறிவிப்பை வௌியிட்டுள்ளது. இனி இந்த முகாம் திறந்த வெளி மையமாக செயல்படும் என நவுறு அரசாங்கம் சுட்டிகாட்டியுள்ளது.
இதன் மூலம் அவர்களது அகதி அந்தஸ்து விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் வரை சுதந்திரமாக அந்த தீவில் நாடமாட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தற்போது நவுறு தீவில், இலங்கையர்கள் உட்பட 600 பேர் வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.